இறை ஊழியர். ஜான் பீட்டர்

News & Events

இறை ஊழியர். ஜான் பீட்டர்

Blog Single

இறை ஊழியர். ஜான் பீட்டர் அவர்களின், செப பரிந்துரையால் பல்வேறு புதுமைகளும், இறைவனின் ஆசீரும் நிரம்ப கிடைக்கப் பெற்று வருகின்றன.

✝️இறை மக்களுக்களின் பெரும் முயற்சியினால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை யன்றும் காலை 11.30 மணிக்கு இறை ஊழியரின் கல்லறையில் செப வழிபாடும், வேண்டுதல் பக்தி முயற்சிகளும் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து நற்கருணை ஆசீரும், திருப்பலியும் நிறைவேற்றப்படுகின்றன.

✝️✝️வாருங்கள், நமது பல்வேறு தேவைகளை இறைவனிடம் எடுத்துக் கூறி மன்றாட, இறை ஊழியர் தந்தை ஜான் பீட்டர் சவரிநாயகம் அவர்களின் செப பரிந்துரைகளை நாடுவோம், இறை ஆசீரை நிறைவாகச் பெற்று மகிழ்வோம்.

இறை ஊழியரின் கல்லறைக்கான வழித்தடம் :

பேருந்துகள் :

திருச்சிராப்பள்ளி புகை வண்டிச் சந்திப்பு, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து – சீறங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, சமயபுரம் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் வரலாம்.

இறங்குமிடம்:

மாம்பழச்சாலை பேருந்து நிறுத்தம். ( Mambalasalai bus stop )

அமைவிடம் :

மாம்பழச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து அம்மா மண்டபம் நோக்கிய 5 நிமிடம் நடைப்பயணத்தில் , இடது புறமாக உள்ள அமல அன்னை ஆலயம், புனித அந்தோனியாரின் திருத்தலத்தில் இறை ஊழியர் தந்தை ஜான் பீட்டர் அவர்களின் கல்லறை அமைந்துள்ளது.

💦💦💦💦💦💦💦💦💦💦
செப உதவிக்கு…..
அருள்தந்தை. ஆ. தைனிஸ் .,
புனிதர் பட்ட வேண்டுகையாளர்,
அமல ஆசிரமம்,
ஸ்ரீரங்கம், திருச்சி – 06.
📞 97 51 99 02 82
💦💦💦💦💦💦💦💦💦💦

Recent Posts: